இயக்குநர் மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. 'பிதா' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மிஷ்கின், மாலிக் ஸ்ட்ரீம்ஸ், ஸ்ரீ கிரீன் சரவணன் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய மிஷ்கின் திரைப்படம்! - Latest kollywood news
இயக்குநர் மிஷ்கின் தயாரிக்கும் 'பிதா' திரைப்படம் ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கியுள்ளது.
மிஷ்கின்
இதில் கலையரசன், ஆர்.ஜே.ரமேஷ் திலக், அனு கீர்த்தி வாஸ், ராதா ரவி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "எங்கள் நிறுவனத்தின் லோகோவை 'பிதா' பட போஸ்டரில் பார்த்தோம். அந்தப் படத்துக்கும் , எங்களுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை. ஆகையால், எங்களுடைய நிறுவனத்தின் பெயரையோ, லோகோவையோ இனிமேல் போஸ்டரில் உபயோகிக்க வேண்டாம்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.