இதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் துப்பறிவாளன் 2 படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் பிரசன்னா, கௌதமி, ரஹ்மான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் சமீபத்தில் நிறைவடைந்து. இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என செய்திகள் வெளியாகின.
விஷாலிடம் 40 இல்ல 400 கோடி கேட்டேன் - இயக்குநர் மிஷ்கின் - துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து வெளியேறிய மிஷ்கின்
விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'துப்பறிவாளன் 2' படத்தை இயக்கும் மிஷ்கின் தற்போது அதில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தை முடிக்க விஷாலிடம் ரூபாய் 40 கோடி கேட்டதாகவும் அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே மிஷ்கின் தற்போது இப்படத்தில் இருந்து விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள படத்தை விஷாலே இயக்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் இருந்து தான் வெளியேறிய காரணம் கூறித்து மிஷ்கின் கூறுகையில், நான் விஷாலிடம் ரூ.40கோடி கேட்டதாக தகவல் வெளியானது. உண்மையில் நான் விஷாலிடம் ரூ. 400 கோடி கேட்டேன். இதுவரை படமாக்கப்பட்ட 50 சதவீத காட்சிக்கு 100 கோடி ரூபாய் செலவானது. மீதமுள்ள படத்தை முடிக்க 400 கோடி ரூபாய் தேவை ஆனால் போதுமான பணம் விஷாலிடம் இல்லாதால் இதில் இருந்து வெளியேறும் சூழல்வந்துள்ளது என்றார்.