தமிழ்நாடு

tamil nadu

இளையராஜாவின் மென்மையான பின்னணி இசையுடன் 'சைக்கோ' மேக்கிங்

By

Published : Jan 20, 2020, 5:55 PM IST

இளையராஜாவின் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக அவரது மென்மையான இசையுடன் கூடிய விடியோவை 'சைக்கோ' படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Mysskin Psycho movie making
Ilayaraja composing background score for Psycho movie

சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சைக்கோ' படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தின் பிரதான கேரக்டரில் நடித்துள்ள உதய்நிதி ஸ்டாலின் பார்வை குறைபாடுள்ளவராக தோன்றுகிறார். இயக்குநர் ராம் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Udhaynidhi stalin in Psycho movie

நடிகை அதீதி ராவ் ஹெய்தரி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படம் வரும் 24ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Aditi rao Hydari in Psycho movie

படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இதையடுத்து மென்னமையான பின்னணி இசை ஒலிக்க,'சைக்கோ' படத்தின் மேக்கிங் காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Nithya menen in Psycho movie

கடந்த இரு வாரங்களுக்கு முன் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில், அதில் காட்டப்பட்டிருந்த காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

ஆனால் ட்ரெய்லரில் உலகப் புகழ்பெற்ற மறைந்த இசையமைப்பாளர் பீதோவனின் இசைக் கோர்ப்பு 'ஃபர் எலீஸ்' இசை பின்னணியில் ஒலிக்க காட்சிகள் இடம்பிடித்திருந்தது. இது இளையராஜா ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அத்துடன் மற்றொருவரின் இசையை இளையராஜா தனது படத்துக்கு பயன்படுத்தியது எப்படி என்ற மில்லியன் டாலர் கேள்வியும் எழுந்த நிலையில், அதுதொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்றது.

Ilayaraja composing background score for Psycho movie

இதைத்தொடர்ந்து 'சைக்கோ' ரிலீஸுக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கும்நிலையில் படத்தைப் பிரபலப்படுத்தும் விதமாக இளையராஜா இசைக்கோர்ப்பு செய்த மென்மையான இசையுடன் கூடிய மேக்கிங் விடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details