சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’. தமிழ், தெலுங்கு மற்றும் பிற தென்னிந்திய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
‘பிசாசு 2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கௌரவ தோற்றத்தில் நடிக்க உடன் நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இறுதிக்கட்டத்தை எட்டியது மிஷ்கினின் பிசாசு 2 சமீபத்தில் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 18ஆம் தேதியுடன் முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:சியான் 60 - முக்கிய அப்டேட்!