மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இமானுவேல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘துப்பறிவாளன்’. இதில் வினய், ஆண்ட்ரியா, பாக்யராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 2017ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வணிக ரீதியாக வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் லண்டனில் இயக்கிவந்தார்.
இதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் துப்பறிவாளன் 2 படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் பிரசன்னா, கௌதமி, ரஹ்மான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் சமீபத்தில் நிறைவடைந்து.
மிஷ்கினின் நிபந்தனை கடிதம் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருந்த நிலையில் விஷாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் இப்படத்திலிருந்து விலகினார். இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (மார்ச் 11) வெளியாகும் என நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான விஷால் அறிவித்திருந்தார்.
தற்போது விஷாலுக்கு மிஷ்கின் 15 நிபந்தனைகள் கொண்ட கடிதம் எழுதியதாகவும் அதில் தான் விஷால் கோபமடைந்ததாக தெரிகிறது. தற்போது அந்த கடிதத்தின் நகல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதிலிருந்து சில முக்கிய நிபந்தனைகள் இதோ.
- இயக்குநரின் சம்பளம் ரூபாய் 5 கோடி ஜிஎஸ்டி உட்பட. இயக்குநரிடம் ஹிந்தி ரீமேக் மட்டுமே உள்ளது. தயாரிப்பாளருக்கு இதில் எவ்வித உரிமையும் கிடையாது. இயக்குநர் இந்தி திரைப்பட ரீமேக்கை எவருக்கும் விற்க முடியும். இதில் தயாரிப்பாளருக்கு எந்த ஆட்சேபனையும் இருக்ககூடாது.
- விஷால் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பதால் இப்படத்தின் தலைப்பு, கதாபாத்திரத்தின் பெயர்கள், துப்பறிவாளன் 1, துப்பறிவாளன் 2 படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரத்தின் பெயர்கள் என அனைத்தும் இயக்குநருக்கே செந்தம்.
- படப்பிடிப்பு இடங்களை முடிவு செய்யும் அனைது உரிமைகளும் இயக்குநரையே சாரும். இதில் தயாரிப்பாளரோ பிரதிநிதிகளே தலையிடக்கூடாது. தயாரிப்பாளர் அல்லது அவரது பிரதிநிதிகளுடன் இயக்குநருடன் நேரடி தொடர்பு இருக்காது.
மிஷ்கினின் நிபந்தனை கடிதம் - படத்தை பற்றிய அனைத்துத் தகவல் தொடர்புகளும் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே இருக்கும். இயக்குநரின் உதவியாளர்களுக்கு இயக்குநரின் விருப்பத்திற்கு இணங்க தனித்த இடம் வழங்கப்படும். அவர்கள் மற்ற படக்குழுவினருடன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த விவரங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டவுடன் முறையான ஒப்பந்தத்தில் சுருக்கமாக எழுதப்பட்டு இயக்குநரும், தயாரிப்பாளரும் அதில் கையெழுத்திடவேண்டும்.
- மேற்கூறிய விஷயத்தில் ஏதாவது ஒன்றைத் தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், துப்பறிவாளன் 2 படத்தைப் பொறுத்தவரை விஷால் ஃபிலிம் ஃபேக்டரிக்கு செய்யும் வேலைகளை இயக்குநர் நிறுத்தலாம் என அதில் உள்ளது.
இதையும் வாசிங்க: விஷாலின் 'துப்பறிவாளன் 2' படத்திலிருந்து விலகிய மிஷ்கின்?