துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் 'சைக்கோ'. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.
யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் பட வரிசையில் இந்தமுறை சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் மிஷ்கின் புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார்.
டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். தன்விர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படம் கடந்த மாதமே வெளியாகவிருந்த நிலையில், தணிக்கைக் குழுவின் சான்றிதழ் கிடைக்காமல் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுவந்தது. இதையடுத்து, படத்திற்கு தணிக்கைக் குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து பட வெளியீடு இம்மாதத்திற்கு மாற்றப்பட்டது.