தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கடைசி விவசாயி பார்த்து கண்கலங்கிய மிஷ்கின்! - கடைசி விவசாயி திரைப்பட விமர்சனம்

கடைசி விவசாயி படம் பார்த்து கண்கலங்கிவிட்டதாக இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

கடைசி விவசாயி பார்த்து கண்கலங்கிய மிஷ்கின்!
கடைசி விவசாயி பார்த்து கண்கலங்கிய மிஷ்கின்!

By

Published : Feb 16, 2022, 2:26 PM IST

காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை உள்ளிட்ட படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கியுள்ள திரைப்படம் தான் கடைசி விவசாயி. இதில் விஜய் சேதுபதி, கதாநாயகனாக நல்லாண்டி என்ற முதியவர், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி பலத்த வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த இயக்குநர் மிஷ்கின் தனது கருத்தை காணொலியாக வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “கடைசி விவசாயி படத்தை தாமதமாகத்தான் பார்த்தேன். இதன் இடைவேளைக் காட்சியை பார்த்து கண் கலங்கிவிட்டேன். படம் முடிந்ததும் என்ன செய்வது என்று தெரியவில்லை. இதை எப்படி வெளிப்படுத்துவது என்றும் தெரியவில்லை. என் மகளுக்கு கடிதம் எழுதுவதுபோல் எழுதலாமா..?.

கடைசி விவசாயி பார்த்து கண்கலங்கிய மிஷ்கின்!

என் வாழ்நாளை சொல்லித்தந்த படமாக இதை பார்க்கிறேன். என் மகளை இப்படத்தை பார்க்க சொல்வேன். நாம் வாழ்க்கையை மிகவும் மெதுவாக வாழ வேண்டும் என்று சொல்லும் படம் இது. நாம் அவ்வளவு வேகமாக சென்றுகொண்டு இருக்கிறோம்.

எனது தந்தைக்கு நிலம் இல்லையே, அவர் ஒரு விவசாயியாக இல்லையே என்று வருத்தம் எனக்கு இருக்கிறது. கனடாவில் படிக்கும் எனது மகளை கடைசி காலத்தில் எங்கு வாழ வேண்டும் என்பதை யோசித்து முடிவு எடுக்க சொல்வேன்” என்றார்.

இதையும் படிங்க:அஜித்தின் புதிய லுக் இணையத்தில் வைரல் - அப்டேட் கொடுத்த போனி கபூர்!

ABOUT THE AUTHOR

...view details