தெலுங்கு மெகா ஸ்டார் சீரஞ்சிவி தனது 152 படமான 'ஆச்சார்யா'வில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை கொரட்லா சிவா இயக்குகிறார். ராம் சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருள்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
இப்படத்தைத் தொடர்ந்து சிரஞ்சீவி, மோகன்லாலின் 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்ஃபாதர் படத்தில் நடித்துவருகிறார். இப்படம் சிரஞ்சீவியின் 153ஆவது படமாகும். இயக்குநர் மோகன் ராஜா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுவருகிறது.
தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தையும் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரணின் கோணிடெலா நிறுவனம் தயாரிக்கிறது. இதனுடன் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
காட்ஃபாதர் படத்துக்காக இசையமைக்கும் பணியை தமன் முழுவீச்சில் மேற்கொண்டுவருகிறார். விறுப்பாக நடைபெற்றுவரும் 'காட்ஃபாதர் 'படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில், மோகன் ராஜாவும் நீரவ்ஷாவும் இசையமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு தமனுடன் விவாதித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தமன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்: இசையமைக்கும் பணியை தொடங்கிய தமன்