தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வணிகர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தனர். அவர்களைக் காவல் துறையினர் அடித்துக் கொலைசெய்ததாகக் கூறி உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்திவந்தனர்.
'காவல் துறை கொலைசெய்தால் யாரை அழைப்பது?' - நீதி கேட்கும் யுவன் - சாத்தான்குளம் சம்பவம்
சாத்தான்குளம் சம்பவத்திற்கு நீதி கேட்கும்விதமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா
மேலும், இருவரின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.
அந்த வகையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'காவல் துறை கொலைசெய்தால் யாரை அழைப்பது?' என்று எழுதப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தை பதிவிட்டு #JusticeForJeyarajAndFenix என ஹேஷ்டேக் செய்துள்ளார்.