தெலுங்கு மெகா ஸ்டார் சீரஞ்சிவி தனது 152ஆவது படமான 'ஆச்சார்யா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கொரட்லா சிவா இயக்குகிறார். ராம்சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருள்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
இதனையடுத்து, சிரஞ்சீவியின் 153ஆவது படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு உரிமையை ராம் சரண் கைப்பற்றினார். 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கை மோகன் ராஜா இயக்கவுள்ளார். சிரஞ்சீவி நடிக்கும் இந்தப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தற்காலிகமாக இப்படத்திற்கு 'சீரு 153' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.