'பரியேறும் பெருமாள்' படத்தை அடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தை 'வி கிரியேஷன்ஸ்' மூலம் தானு தயாரித்துள்ளார்.
'கர்ணன்' அனைத்தையும் கொடுப்பான் - சந்தோஷ் நாராயணன்! - தனுஷின் புதியப்படங்கள்
சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர்ணன்' படத்தைப் பார்த்து திகைத்து போனதாக இசையமைபாபாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லால், நட்டி என்கிற நடராஜன், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநெல்வேலியை சுற்றியுள்ள ஊர்களில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடைபெற்றுவந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் தற்போது இறுதிகட்ட பணிகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டரில், 'கர்ணன்' பார்த்தேன். திகைத்துப்போனேன் தனுஷ், மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு மற்றும் சிறப்பான படக்குழுவினரைப் பார்த்து பெருமைப்படுகிறேன். கர்ணன் அனைத்தையும் கொடுப்பான் என்று பதிவிட்டுள்ளார்.