தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சர்வதேச அளவில் அறிமுகமாகும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் - Sam Hoi

வியட்நாமிய மொழியில் உருவாகியுள்ள சாம் ஹொய் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் சர்வதேச அளவில் அறிமுகமாகவுள்ளார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்
இசையமைப்பாளர் சாம் சி.எஸ்

By

Published : Dec 21, 2020, 7:04 PM IST

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தனது தனித்தன்மைமிக்க இசையால் திரையுலகத்தில் பிரபலமடைந்தவர். திரைப்படத்தின் பின்னணியில் ஒலிக்கும் அவரது இசை மொழிகடந்து பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்று தந்துள்ளது.

அவரது இசையில் பெரிய பட்ஜெட் படங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில், தற்போது, உலக திரையரங்களில் அறிமுகமாகவுள்ளார். சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இயக்கும் வியட்நாமிஸ் படமான சாம் ஹொய் ( Sam Hoi ) எனும் திரைப்படத்திற்கு சாம் இசையமைக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், "மிக மகிழ்ச்சியாகவும் அதே நேரம் சற்று பதற்றமாகவும் உள்ளது. தமிழில் கிடைத்த அதே வரவேற்பு உலக ரசிகர்களிடம் இருந்தும் கிடைக்குமென எதிர்பார்க்கிறேன். உலக திரைப்படத்திற்கு இசையமைக்கும் இந்த அரிய வாய்ப்பு, சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் மூலம் தான் கிடைத்தது. இப்படத்தை அவர் தான் இயக்குகிறார்.

என் மேல் அவர் வைத்திருக்கும் பெரும் நம்பிக்கைக்கு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனுபவம் முற்றிலும் புதிதாக, மேஜிக்கல் தருணமாக இருந்தது. படத்தில் தூள் பறக்கும் ஆக்சன் காட்சிகள் பாக்ஸிங் வளையத்திற்குள் நடப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. எமோஷனல் காட்சிகளும் இப்படத்தில் உண்டு. எனவே எனது திறமையை வெளிக்கொண்டு வர நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது கொரியன் பட வாய்ப்புகளும் என்னை தேடி வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது." என்றார்.

இதையும் படிங்க:கிறிஸ்துமஸுக்கு 5 புதுப் படங்கள் ரிலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details