இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இப்படம் தற்போது இறுதிகட்ட பணிகளை எட்டியுள்ளது. இப்படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையிடவுள்ளதாக படக்குழு முன்னரே அறிவித்திருந்தது.
'தலைவர் 168' படத்துக்கு இசையமைக்கும் 'விஸ்வாச' இசையமைப்பாளர்! - இமான் அப்டேட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள தலைவர் 168 படத்தின் இசையமைப்பாளரை தயாரிப்புக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
rajaini
தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தனது அடுத்த படத்திற்காக ரஜினி தயாராகிக்கொண்டிருக்கிறார். இப்படம் 'தலைவர் 168' என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதனையடுத்து இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைப்பார் என்று தயாரிப்புக் குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.