தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மேஸ்ட்ரோ இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

இசைஞானி இன்று (ஜூன் 2) தனது 65ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இசையால் தமிழ் ரசிக மனங்களைக் கட்டிப்போட்ட என்றும் இசையின் ராஜா இளையராஜா குறித்த சிறப்புக் கட்டுரை.

இளையராஜா
இளையராஜா

By

Published : Jun 2, 2021, 1:10 PM IST

Updated : Jun 2, 2021, 2:00 PM IST

இளையராஜா வேறு, இசை வேறு என்று பிரித்திட முடியாது. ஏனென்றால் ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாய் இவரது பாடல்களைக் கேட்டு மட்டுமே நாம் வாழ்க்கையைக் கடந்துவருகிறோம். ஏக்கம், காதல், நட்பு, உந்து சக்தி, மன நிம்மதி என இவர் இசையமைத்த பாடல்கள் இன்னும் மக்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக இருக்கிறது.

அவரது முதல் படமான ’அன்னக்கிளி’ படத்தில் மச்சானைப் பார்த்தீங்களா பாடல் திரையரங்கில் ஒளித்தபோது, அந்தப் பாடலுக்கு நடனமாடாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ’16 வயதினிலே’ படத்திற்குப் பிறகுதான் என்னுடைய இசையில் நான் என்வெல்லம் சேர்க்க வேண்டுமோ அத்தனையும் சேர்த்தேன். அதற்கு முன்பு வரையுள்ள இசையமைத்த பாடலுக்கும், அதற்குப் பிறகு இசையமைத்த பாடலுக்கு நிறைய வேறுபாடுகள் உள்ளன என ஒரு முறை கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.

இளையராஜா மேஸ்ட்ரோ

’முள்ளும் மலரும்’ படத்தில் அண்ணன் தங்கைக்கான பாசம், ‘உதிரிப்பூக்களில்’ குழந்தைகளுக்கும், அஷ்வினுக்குமான பயணத்தில் அவரின் பின்னணி இசை கல்நெஞ்சம் கொண்டவராக இருந்தாலும் கலைத்துவிடும்.

இவரின் காற்றில் மிதக்கும் சங்கீதத்தை கேட்டுத்தான் மக்கள் இரவில் 90-களில் வாழ்ந்துவந்தனர். சிற்றுந்து தொடங்கி, கார்கள் வரை இவர் பாடல்கள் இல்லாத பயணமே இல்லை என அடித்தும் சொல்லலாம்.

இசை ஜாம்பவான்

கிராமப்புறங்களில் பேருந்தில் செல்லும்போது இளையராஜாவின், ’இது ஒரு பொன்மாலைப் பொழுது’ பாடல் கேட்டுக்கொண்டே ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து சென்றால் கிடைக்கும் சுகம் எந்த ஒரு பாடலிலுமே கிடைக்காது என்பதே மறுக்க முடியாத உண்மை.

பொதுவாக ஒரு பாடலை உருவாக்க ஒரு மாதம் தேவைப்படும் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் இளையராஜா, ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலை அரைமணி நேரத்தில் மட்டுமே உருவாக்கி ஹிட் கொடுத்துள்ளார்.

காதல்

காதல் என்றாலே 90-ஸ் கிட்ஸ் காலகட்டத்தில் கண்டிப்பாக இந்தப் பாடல் ஞாபகம் வரும். தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இடம்பெற்றுள்ள ’காதலின் தீபம் ஒன்று’ பாடல் காலம் கடந்து ஒலித்தவை. கண்களை மூடிக்கொண்டு இந்தப் பாடலைக் கேட்டால், காதலிக்காதவர்கள்கூட காதலில் விழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

இசையும் இளையராஜாவும்

ஏக்கம்

இவரின் காதல் சார்ந்த பின்னணி இசைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக 1991ஆம் ஆண்டு வெளியான தளபதி படத்தைச் சொல்லலாம். ரஜினியும், சோபனாவும் பிரியும் சமயத்தில் வரும் பின்னணி இசையே அந்த ஏக்கத்தைச் சொல்லிவிடும்.

நட்பு

தமிழில் நட்பை உணர்த்தும் பாடலைத் தேடினால், முதலாவதாக நம் நினைவுக்கு வருவது ஒன்று, 'காட்டு குயிலு மனசுக்குள்ள' பாடல்தான். ரஜினி, மம்மூட்டி இணைந்து நடித்த தளபதி திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றிருக்கும்.

இளையராஜாவின் தவிர்க்க முடியாத பாடல்கள்

*அந்தி மழை பொழிகிறது

*ஆயிரம் தாமரை மொட்டுகளே

*ஆனந்த ராகம்

*ஓம் நமஹ

*சின்ன கண்ணன் அழைக்கிறான்

*ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என வரிசையாகச் சொல்லிக்கொண்டே செல்லலாம்.

இந்தியாவில் முதல் முறையாகப் பின்னணி இசைக்கான விருதை வென்ற இளையராஜாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து. மேலும் வானில் இறக்கை கட்டி உங்கள் பாடல்கள், என்றென்றும் ஒலிக்கட்டும்!

Last Updated : Jun 2, 2021, 2:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details