இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் '96'. பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமானது.
இப்படத்தின் வெற்றிக்கு கோவிந்த் வசந்தாவின் இசையும் முக்கியக் காரணங்களில் ஒன்று. இப்படத்தில் இவரின் இசையில் அமைந்த எல்லா பாடல்களும் ப்ளாக் பஸ்டர் ஹிட்!
இந்நிலையில், இந்தியா திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான 'தாதா சாஹேப் விருது' கோவிந்த் வசந்தாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமேஷ் லால் இயக்கத்தில் ‘Humans of Someone’ என்ற படத்துக்கு சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக கோவிந்த் வசந்தாவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில், ‘Humans of Someone' படத்தின் பின்னணி இசைக்காக பெருமைக்குரிய தாதா சாஹேப் விருதைப் பெருவதில் பெருமையடைகிறேன். இந்தப் படத்துக்கு சிறப்பாக இசையமைத்தேன் என்பதை உறுதியாக கூறமுடியும். இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்ததற்கு சுமேஷ் லால், நிதின்நாத் ஆகியோருக்கு நன்றி என்று ட்வீட் செய்துள்ளார்.