தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அஜித் ரசிகரால் மாற்றுத்திறனாளிக்கு வாய்ப்பளித்த இமான்! - கண்ணான கண்ணே

அஜித் ரசிகரால் மாற்றுத்திறனாளி ஒருவரின் திறமையை கண்டு இமான் தனது இசையில் பாட வாய்ப்பளித்துள்ளார்.

Imman give chance to visibly challaged person

By

Published : Sep 22, 2019, 4:02 PM IST

பாலா ஜித் எனும் அஜித் ரசிகர், மாற்றுத்திறனாளி ஒருவர் ‘விஸ்வாசம்’ படத்தில் வரும் ’கண்ணான கண்ணே’ பாடலை பாடுவதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இமான், சித் ஸ்ரீராம் ஆகியோரை டேக் செய்திருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த இமான், அவரின் முகவரியை பகிரும்படி கேட்டுக்கொண்டார். இதனையடுத்து இணையவாசிகள் அவரது முகவரியை கண்டுபிடித்து இமானுக்கு அனுப்பினர்.

இந்நிலையில் இமான் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ’அவரின் முகவரியை பகிர்ந்தவர்களுக்கு நன்றி. சம்பந்தப்பட்ட நபரிடம் பேசினேன். என்னுடைய திரைப்படத்தில் அவர் ஒரு பாடல் பாடுவதற்கு வாய்ப்பளிக்கவுள்ளேன். இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்’ என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details