உலக அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சிலர் தங்களது அம்மா குறித்த அனுபவங்களை, ரசிகர்களுடன் பகிர்கின்றனர்.
'அடுத்த ஜென்மத்திலும் நானே, உங்களுக்கு மகனாகப் பிறக்க வேண்டும்' - இசையமைப்பாளர் அம்ரீஷ் - mother's day special
சென்னை: இசையமைப்பாளர் அம்ரீஷ் தனது தாய்க்கு, அன்னையர் தின வாழ்த்துக் கூறி, பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அந்தவகையில் இசையமைப்பாளர் அம்ரீஷ் தனது தாய்க்கு, அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'கரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். பாதுகாப்புடன் வீட்டிலேயே இருங்கள். கரோனா வைரஸில் இருந்து கண்டிப்பாக அனைவரும் கூடிய விரைவில் வெளியே வந்துவிடுவோம் என்று நம்புகிறேன். நீங்களும் நம்பிக்கையோடு இருங்கள்.
அதேசமயம், இன்று அன்னையர் தினம். ஆகையால், என் அம்மாவிற்கு வாழ்த்துகள் கூறுவதற்கு விரும்புகிறேன். என் அம்மா நடிகை ஜெயசித்ரா பற்றி ஒரே வரியில் கூற வேண்டுமென்றால், 'அவர் இல்லையென்றால் நான் இல்லை. அவர் இல்லை என்றால் நான் இன்று, இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் மீண்டும், அவருக்கே மகனாகப் பிறக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.
ஒருவேளை அது நடக்காமல் போனால், என் தாய் எனக்கு மகளாகவோ, மகனாகவோ பிறக்க வேண்டுமென்று, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'வாத்தி கமிங்' பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட கோலி சோடா நாயகி