பிர்லா கோளரங்கத்தில் அமெரிக்கத் துணை தூதரகத்தின் சார்பில் ’சென்னையில் நீர் மேலாண்மை’ குறித்த விழிப்புணர்வு கண்காட்சி இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியை திறந்துவைத்து, நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய திரை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ” தண்ணீர் என்பது அடிப்படை உரிமை, அதைப் பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். குழாயைத் திறந்தால் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும். அதில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது. தண்ணீர் குறித்து விழிப்புணர்வு முதலில் ஒவ்வொருவரின் குடும்பத்திற்குள் வரவேண்டும். 2017ஆம் ஆண்டு பெய்த கனமழையில் எனது குடும்பமும் பாதிப்பை அனுபவித்துள்ளது.
தண்ணீர் பெறுவதில் பாகுபாடு கூடாது - ஏ.ஆர். ரகுமான் - ஏ.ஆர். ரகுமான்
சென்னை: குழாயைத் திறந்தால் ஏழை, பணக்காரன் என்றப் பாகுபாடின்றி தண்ணீர் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் வலியுறுத்தியுள்ளார்.
speech
தண்ணீர் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பாடல்களை ஏற்கெனவே நான் பாடியுள்ளேன். உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தப் பாடல் இயற்றிக் கொண்டிருக்கிறோம். அதில் உலகளவிலான பலர் பாடியுள்ளனர். 2 மாதத்திற்குள் அப்பாடலை வெளியிட உள்ளோம். தமிழிலும் அப்பாடலை மொழிபெயர்த்துக் கொள்வதில் எவ்வித சிரமமும் இருக்காது ” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாவடை தாவணியில் பெருமாளைத் தரிசித்த சின்ன மயில் 'ஜான்வி'