சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் 'தர்பார்' படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பேட்டியளித்துள்ளார் இயக்குநர் முருகதாஸ்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் இயக்குநர் முருகதாஸ் , " 'தர்பார்' படத்தின் பல காட்சிகளை யதார்த்தமாக இருக்கும் விதமாக படமாக்கினோம். நிஜமாக பெய்த மழையில் ஒரு காட்சியை எடுத்தபோது ரஜினிகாந்த் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார்.
எப்போதும் நாம் செய்யும் வேளையில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும். போட்டியாளர்கள், எதிர்மறை கருத்துகள் பற்றி கவலைப்படக்கூடாது என்று ரஜினி எனக்கு அறிவுரை கூறினார்.
26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார், ரஜினி. பொதுவாக செல்வாக்கு மிக்கவர்களின் தலையாட்டி பொம்மையாக இருக்கும் போலீஸ் ஒரு ரகம். நேர்மை, தனித்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் போலீஸ் இரண்டாம் ரகம். இதில் இரண்டாவது ரக போலீஸாகத் தோன்றும் ரஜினி முரட்டுத்தனமான ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற என்கவுன்டர் போன்ற காட்சி படத்திலும் உள்ளது. இந்தக் காட்சியை நிஜ சம்பவத்துக்கு முன்னரே படமாக்கினோம். நிஜ என்கவுன்டருக்குப் பின்னர் இந்தக் காட்சி பற்றி என்னிடம் பேசினார் ரஜினி.