தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காஞ்சனா-3 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் இன்று மாலை ரிலீஸ் - ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-3 படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

ராகவா லாரன்ஸ்

By

Published : Mar 22, 2019, 5:34 PM IST

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு திகில் கலந்த காமெடி படமாக வெளிவந்து வெற்றிப்பட்ட படம் முனி. அதன் வெற்றியைத்தொடர்ந்து முனி இரண்டாம் பாகத்தை காஞ்சனா என்ற பெயரில் இயக்கினார். அப்படத்தில் நடிகர் சரத்குமார் திருநங்கையாக நடித்திருந்தார். அவரது நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது.

மேலும், முனி படத்தின் மூன்றாவது பாகமாக காஞ்சனா-2 வை இயக்கினார். இந்தப்படத்தில் ராகவா லாரன்ஸ் இரட்டை வேடத்தில் நடித்து மிரட்டியிருந்தார். அதிலும் மொட்டை கெட்டப்பில் வந்த காட்சிகள் கைதட்டலை வாங்கியது. இப்படத்தில் நடிகை டாப்ஸி, நித்யா மேனன் ஆகியோர் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முனி படத்தின் நான்காவது பாகமான காஞ்சனா-3 படத்தை ராகவேந்திரா புரொடெக்ஷன்ஸ் சார்பில் அவரே தயாரிக்கிறார். சமீபத்தல் இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. காஞ்சனா மூன்றாவது பாகத்தில் பிக்பாஸ் புகழ் ஓவியா கதாநாயகியாகவும், முனி படத்தில் நடித்த வேதிகா ஆகியோர் நடிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து கோவை சரளா, தேவதர்ஷினி, நிகிதா, கபீர் துல்ஹான் சிங், சத்யராஜ், மனோபாலா, கிஷோர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

காஞ்சனா-3 படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்ட நிலையில் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதம் வெளியிட காத்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள நண்பனுக்கு கோயில் கட்டு என்னும் பாடல் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவலை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details