தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மாஸ் காட்டும் முகேன்; வெளியானது மோஷன் போஸ்டர் - sivangi

'பிக்பாஸ்' முகேன் நடிக்கும் 'வேலன்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று (ஆக. 14) வெளியிடப்பட்ட நிலையில், அந்த மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

முகன் ராவ், முகன், MUGEN RAO, MUGEN, VELAN MOVIE, MUGEN VELAN MOVIE, முகன் வேலன் திரைப்படம்
MUGEN RAO MOTION POSTER RELEASED

By

Published : Aug 14, 2021, 3:53 PM IST

Updated : Aug 14, 2021, 4:29 PM IST

சென்னை:பிக்பாஸ் சீசன்-3இல் டைட்டில் வின்னர் முகேன், தற்போது 'வேலன்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இது இவருக்கு இரண்டாவது படம்.

கவின் மூர்த்தி இயக்கும் இப்படத்தில் மீனாட்சி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபு, சூரி, தம்பிராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக்'போஸ்டரை துல்கர் சல்மான், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

சிவாங்கி பாடியுள்ளார்

DELETE THIS TEXT

இப்படத்தின், பாடல்கள் டிராக் மிக்ஸிங் நிறைவடைந்ததாகப் படக்குழு கடந்த ஜூலை 20ஆம் தேதி தெரிவித்திருந்தது.

பாடகர் வேல்முருகன், சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா, குக்குவித் கோமாளி புகழ் சிவாங்கி உள்ளிட்டோர் இப்படத்தில் பாடல்களை பாடியுள்ளனர்.

மோஷன் போஸ்டர்

இந்நிலையில், இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று (ஆக. 14) வெளியாகியுள்ளது. ஒரு கோலி குண்டை, கவனில் வைத்து முகேன் குறிபார்ப்பது போன்று அந்த மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதை, ஒரு ஒரே கோலி குண்டை வைத்து முகேன் மாஸ் காட்டுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: 29 years of சூரியன் - 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'

Last Updated : Aug 14, 2021, 4:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details