வைஜெயந்தி சினிமாஸ், ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகிவருகிறது. 1964ஆம் ஆண்டில் நடைபெறும் ஒரு ப்ரீயட் காதல் கதையாக உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார்.
சமீபத்தில் துல்கர் சல்மானின் போஸ்டர் வெளியிடப்பட்டது. போர் பின்னணியில் ஒரு காதல் என்பதே படத்தின் மிகவும் ஈர்க்கத்தக்க அம்சமாக உள்ளது. இப்படத்தில் ராம் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார்.