தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாய்" நடிகர் விஜய்க்கு தாயாரின் கடிதம் - தளபதிக்கு தாயாரின் கடிதம்

ஷோபா சந்திரசேகர் பிகில் படத்திற்கான தனது நினைவுகளையும் வாழ்த்துகளையும் சேர்த்து தளபதி விஜய்க்கு எழுதிய கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாய்

By

Published : Aug 28, 2019, 11:57 AM IST

Updated : Aug 28, 2019, 2:27 PM IST

அட்லி இயக்கத்தில் தீபாவளி பண்டிகையன்று வெளிவர இருக்கும் தளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் இசை வெளியீடு கூடியவிரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தளபதி விஜய்க்கு அவரது தாய் ஷோபா சந்திரசேகர் ஒரு கடிதத்தை எழுதி அதில் பிகில் படத்திற்கான தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

'ஈன்றெடுக்கும் சிசு' என்று தொடங்கும் அந்த கடிதம் 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாய்' என்ற வள்ளுவரின் வரிகளை நம்முள் நினைவுபடுத்துகிறது. அந்த தாயின் வயிற்றில் தவழ்ந்த பிள்ளையை தளபதியாய் பார்த்து அகம் மலரும் ஷோபா சந்திரசேகர் தன்னையும் ஒரு ரசிகை என்று சொல்லியே கடிதத்தை முடிக்கிறார். அந்த இளவயது மகனின் சிரிப்பை, அழுகையை, அமைதியை அணுஅணுவாய் ரசித்த அவர், அந்த நினைவுகளை எந்த காகிதத்தில் வடிப்பது என்று தனக்கு தானே கேள்வி கேட்டு கொள்கிறார்.

இப்படி தனது நினைவுகளை அசைபோடும் தாயார் ஷோபா சந்திரசேகரின் அந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Last Updated : Aug 28, 2019, 2:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details