தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாத இறுதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதனையடுத்து மாநிலத்தில் தொற்று பரவல் குறைய ஆரம்பித்த நிலையில், நான்கு மாதங்கள் கழித்து கடந்த வாரம் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன.
திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால், தயாரிப்பாளர்கள் பலரும் தங்களது படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட ஆரம்பித்தனர். அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களும் ஓடிடியில் வெளியானதால், திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.