தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

செவிலியர்களை பெருமைப்படுத்தும் செவிலியர் கடவுள்! - Movie about nurse and doctors

வெள்ளுடை தரித்த மானுட கடவுளான மருத்துவர்களையும், செவிலியர்களையும் இந்தப் படம் மேன்மைப்படுத்தும். ஒரு படைப்பாளியாக இந்தப் படத்தை இயக்குவதில் பெருமை கொள்கிறேன் என இயக்குநர் தெரிவித்தார்.

tn_che_08_nurse_film_script_7205221
tn_che_08_nurse_film_script_7205221

By

Published : Aug 8, 2021, 6:25 PM IST

தருமபுரி டாக்டர் வே.சரவணன் வழங்கும் படம் 'செவிலியர் கடவுள்'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் குணாஜீ எழுதி இயக்குகிறார். இவர் 'ஜனநாயகக் கொலை', 'திருப்பி அடி' குறும்படங்களை இயக்கியவர்.

கரோனா சமயத்தில் தங்கள் உயிரை துச்சமாக எண்ணி மக்கள் சேவை ஆற்றிய உலக செவிலியர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்தப் படம் உருவாகவுள்ளது. உலகத்திலேயே ஆகச் சிறந்த மருந்து 'அன்பு' என்பதுதான் படத்தின் மையக்கரு.

அதே சமயம் கரோனாவை விட கொடியவர்கள் மனிதர்கள் என்பதையும், எல்லா மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கிறது என்பதை கருத்தியல் படமாக இல்லாமல், கமர்ஷியல் படமாக உருவாக்க இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.

கரோனா சமயத்தில் குடும்பத்தை பிரிந்து பல மணி நேரம் கஷ்டமான கவச உடை அணிந்து சேவை ஆற்றிய செவிலியர்களின் கடமையையும் தியாகத்தையும் அழுத்தமாக பதிவு செய்யவுள்ளார்கள்.

செவிலியர்களை பெருமைப்படுத்தும் செவிலியர் கடவுள்
இதில் நாயகனாக விஷ்ணு ப்ரியன் நடிக்கிறார். இவர் 'மை', 'மெர்லின்', 'இலக்கணம்' ஆகிய படங்களில் நடித்தவர். நாயகியாக வண்ணத்தமிழ் சூர்யா நடிக்கிறார். இவர் பிரபல கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்.இவர்களுடன் 'திருப்பாச்சி' பெஞ்சமின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனிஸ் சாலமன் இசை அமைக்கிறார். கார்த்திக் பாலா ஒளிப்பதிவு செய்கிறார். கணேஷ் எடிட்டிங்கை கவனிக்கிறார்.படம் குறித்து இயக்குநர் குணாஜீ கூறியதாவது, "வெள்ளுடை தரித்த மானுட கடவுளான மருத்துவர்களையும், செவிலியர்களையும் இந்தப் படம் மேன்மைப்படுத்தும். ஒரு படைப்பாளியாக இந்தப் படத்தை இயக்குவதில் பெருமை கொள்கிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details