தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நான்கு மாதம் கழித்து மும்பை திரும்பிய மெளனி ராய்! - Latest cinema news

நடிகை மெளனி ராய் அபுதாபியில்யில் இருந்து நான்கு மாதம் கழித்து மீண்டும் மும்பை திரும்பியுள்ளார்.

Mouni
Mouni

By

Published : Jul 14, 2020, 6:26 PM IST

'நாகினி' தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை மெளனி ராய். தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்ப செய்யப்பட்டது. இவர் தற்போது பிரம்மாஸ்த்ரா, மொகுல் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் ஊரடங்கு துவங்கும் முன்பு போட்டோ ஷூட்டிற்காக அபுதாபி சென்று இருந்தார். இதையடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அவர் மும்பைத் திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கி கொண்டார்.

இதைத்தொடர்ந்து நான்கு மாதம் கழித்து, தற்போது இவர் இந்தியா திரும்பி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான்கு நாள்களுக்கான உடையுடன் அபுதாபி சென்று இருந்தேன். திடீரென அறிவித்த ஊரடங்கால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனது அம்மா, தம்பியை பிரிந்திருந்தது தான் மனதிற்கு சோகத்தை ஏற்படுத்தியது .

மற்ற படி அங்கு இருப்பது எனக்கு பிடித்து இருந்தது. எப்போ தான் இந்தியா திரும்புவோம் என்று எதிர்பார்த்து காத்து இருந்தேன். ஒருவழியாக நான்கு மாதம் கழித்து திரும்பி விட்டேன்" என்று கூறியுள்ளார்.

நடிகை மெளனி ராய் விமானத்தில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details