கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்தின் அறிவிப்புகள் ஒரு மாதத்திற்கு முன்பே வெளியானது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறது. நாளுக்கு நாள் இப்படம் குறித்த அப்டேட் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படம் சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் முக்கிய படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் பெயர் இன்னும் வைக்கப்படாததால் எஸ்கே16 என அழைக்கப்படுகிறது.
SK16-ல் களமிறங்கும் இரண்டு இயக்குநர்கள்..! - sivakarthikeyan
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே16 படத்தின் புதிய அப்டேட் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள், மற்றும் பிற நடிகர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். மேலும், நடிகர் நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ், சமுத்திரக்கனி, இயக்குநர் பாரதிராஜா, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது. நிரவ் டி ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆண்டனி ரூபன் எடிட்டிங் செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
மெரினா, கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் -பாண்டிராஜ் கூட்டணி மூன்றாவது முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளது.