கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள திரைப்படம் ‘மூத்தோன்'. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்னரே டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. இப்படம் மலையாளம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தி வசனத்தை இயக்குநர் அனுராக் காஷ்யப் எழுதியுள்ளார்.
சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான நிவின் பாலி படம்! - நிவின் பவ்லி
டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவிற்கு நிவின் பாலி நடித்துள்ள 'மூத்தோன்' திரைப்படம் தேர்வாகியுள்ளது.
moothon
'மூத்தோன்', அண்ணனை தேடும் ஒரு தம்பியின் கதை, அதிலும் த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் டீசர் ஜனவரி மாதம் வெளியானது. இதையடுத்து இப்படம் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. மேலும், மும்பை திரைப்பட விழா 2019க்கும் தேர்வாகியுள்ளது.
இதில் நிவின் பாலி, ஷோபித்தா துளிபலா, ஷாஷாங் அரோரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.