தமிழ்நாடு

tamil nadu

'மூத்தோன்' உருவான வீடியோ வெளியீடு!

By

Published : Nov 18, 2019, 10:46 PM IST

Updated : Nov 19, 2019, 7:35 AM IST

நிவின் பாலி நடிப்பில் வெளியான 'மூத்தோன்' படம் உருவான விதம் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Moothon

தேசிய விருதுபெற்ற ‘லையர்ஸ் டைஸ்’ படத்தை இயக்கிய கீது மோகன்தாஸின் அடுத்த படைப்பு ‘மூத்தோன்’. இதில் நிவின் பாலி, சசங் அரோரா, சோபிதா துலிபலா, மெலிசா ராஜு தாமஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் நவம்பர் 8ஆம் தேதி வெளியானது. லட்சத்தீவிலிருந்து தனது அண்ணனை தேடி மும்பை வரும் தம்பியின் கதையே மூத்தோன்.

படம் வெளியாகும் முன்பே டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘மூத்தோன்’ படம் திரையிடப்பட்டது. இப்படம் மலையாளம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தியில் அனுராக் கஷ்யப் இதற்கு வசனம் எழுதியுள்ளார்.

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதுநாள் வரை காதல் மன்னன், சாக்லேட் பாயாக வலம்வந்த நிவின் பாலி இப்படத்தில் மொத்தமாக தனது கெட்டப்பை மாற்றியுள்ளார்.

இந்தப் படத்திற்காக அவர் செய்த கெட்டப் சேஞ்ச், படம் உருவான விதம் குறித்த சின்ன வீடியோ ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Last Updated : Nov 19, 2019, 7:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details