தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிஎஸ்கே - ஆர்சிபி ஆட்டத்தின் இடையே வெளியாகும் 'மூக்குத்தி அம்மன்' ட்ரெய்லர்! - மூக்குத்தி அம்மன் வெளியாகும் தேதி

சென்னை : நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை (அக்.25) வெளியாக உள்ளது.

நயன்தாரா
நயன்தாரா

By

Published : Oct 24, 2020, 7:01 PM IST

Updated : Oct 24, 2020, 8:35 PM IST

கோலிவுட்டில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நயன்தாராவைக் கொண்டு, நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்'. அறிமுக இயக்குநர் என்.ஜே.சரவணன் உடன் இணைந்து இந்தப் படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா இருவருடனும், இப்படத்தில் மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், அஜய் கோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், இந்துஜா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், வரும் தீபாவளி விடுமுறைக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் இத்திரைப்படம் வெளியிடப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நாளை (அக்.25) சென்னை - பெங்களூர் அணிகளுக்கிடையிலான டி20 ஆட்டத்தின்போது வெளியிடப்பட இருப்பதாக படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு, நயன்தாராவின் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Last Updated : Oct 24, 2020, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details