தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ டிரெய்லர் வெளியானது - nayanthara

ஆர்ஜே பாலாஜி, சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

Mukuthi Amman
Mukuthi Amman

By

Published : Oct 25, 2020, 9:46 PM IST

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி K கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். RJ பாலாஜி, இயக்குநர் NJ சரவணன் உடன் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில், ஊர்வசி, மௌலி, அஜய் கோஷ், ஸ்ம்ருதி வெங்கட், மது, அபிநயா, மனோபாலா, மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது. இதில் நடிகை நயன்தாரா அம்மனாக நடித்துள்ளார். இதன் டிரெய்லர் இன்று நடைபெற்ற CSK vs RCB இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது வெளியிடப்பட்டது.

இதுகுறித்து RJ பாலாஜி, “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து கொண்டாடும் வகையிலான படமாகும். தீபாவளியை விட ஒரு சிறந்த நாள் இப்படத்தை வெளியிட கிடைக்காது, அதிலும் இணைய உலகை கலக்கும் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் வி ஐ பி தளத்தில் வெளியாவது எங்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி. இது பண்டிகை நாளில் பெரும் மகிழ்ச்சியை அனைவர் மனதிலும் உண்டாக்கும் என உறுதியாக கூறுகிறேன் என்றார்.இப்படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு பதிப்பான அம்மொரு தல்லி டிரெய்லரை டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வெளியிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details