தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எலியிடம் சிக்கிய எஸ்.ஜே. சூர்யா: திரைக்கு வரத் தயார் - ஜஸ்டின் பிரபாகரன்

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'மான்ஸ்டர்' திரைப்படத்தின் பாடல்கள், திரைக்கு வரும் தேதி குறித்து படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

poster

By

Published : May 6, 2019, 11:49 AM IST

'ஒரு நாள் கூத்து' படத்தைத் தொடர்ந்து, வெங்கடேசன் எழுதி இயக்கும் படம் 'மான்ஸ்டர்'. கதாநாயகனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்க அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். இப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

மான்ஸ்டர் போஸ்டர்

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் எலி ஒன்று நடித்துள்ளது. இப்படத்தில் எலி நடிப்பதற்கு சில பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன. பின் எலி சம்பந்தமாக சில காட்சிகள் கிராபிக்ஸிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மே 8ஆம் தேதி படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 'மான்ஸ்டர்' படத்திற்கு தணிக்கைக் குழுவினர் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

தற்போது, படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிந்து விட்ட நிலையில் மே 17ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details