தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வேட்டைக்கு திரும்பினார் புரொஃபசர் - வெளியானது மணி ஹெய்ஸ்ட் - மணி ஹெய்ஸ்ட்

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'மணி ஹெய்ஸ்ட் ' வெப் சீரிஸின் 5ஆவது சீசன் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

மணி ஹெய்ஸ்ட்
மணி ஹெய்ஸ்ட்

By

Published : Sep 3, 2021, 12:52 PM IST

Updated : Sep 3, 2021, 1:03 PM IST

அலெக்ஸ் ரோட்ரிகோ இயக்கிய 'ஆண்டெனா 3' என்ற 'லா காஸா டி பாபெல்' என்ற சீரிஸ் ஸ்பானிஷ் சேனலில் 2017ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. மொத்தம் 15 எபிசோடுகளைக் கொண்ட இந்தத் தொடரின் உரிமையை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், 'மணி ஹெய்ஸ்ட்' என்ற பெயரில் 22 எபிசோடுகளாக பிரித்து வெளியிட்டது.

ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் எட்டு கொள்ளையர்களையும், அவர்களை வழிநடத்தும் புரொஃபஸர் என்ற ஒருவரையும் சுற்றி நடக்கும் கதைதான் இந்த சீரிஸ்.

ஏற்கனவே நான்கு சீசன்கள் வெளியாகி உலகம் முழுவதும் ஹிட் அடித்தது. இதனையடுத்து இதன் ஐந்தாவது சீசன் வெளியாவதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸில் மணி ஹெய்ஸ்ட்டின் ஐந்தாவது சீசன் இந்திய நேரப்படி இன்று (செப்டம்பர் 3) பிற்பகல்12.30 மணிக்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த பாகத்தில் மொத்தம் 5 எபிசோடுகள் உள்ளன. இந்த சீசனின் அடுத்த பாகம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இயங்கும் 'வெர்வ் லாஜிக்' என்ற நிறுவனம் இந்த வெப் சீரிஸை காண்பதற்காக தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Sep 3, 2021, 1:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details