தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முடிவுக்கு வரும் மணி ஹெய்ஸ்ட்: வெளியான 'பார்ட் 2' டீசர்! - முடிவுக்கு வரும் மணி ஹெய்ஸ்ட்

பிரபல இணையத்தொடரான மணி ஹெஸ்ட் தொடரின் பார்ட் 5வின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது. இதனுடன் இந்த தொடர் முடிவடைவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

money heist
money heist

By

Published : Oct 13, 2021, 8:10 PM IST

நெட்ஃப்ளிக்ஸில் சக்கைப்போடு போட்ட அதிரிபுதிரியாக ஹிட்டடித்த தொடர் மனி ஹெய்ஸ்ட். வங்கி கொள்ளைக்காரர்களின் கதையை மையப்படுத்திய இத்தொடருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

அலெக்ஸ் ரோட்ரிகோ இயக்கிய இத்தொடர் ஆண்டெனா 3 என்ற ஸ்பானிய தொலைக்காட்சி சேனலில் ’லா காஸா டி பாபெல்’ என்ற பெயரில் 2017ஆம் ஆண்டு முதன்முதலில் ஒளிபரப்பானது. மொத்தம் 15 எபிசோடுகளைக் கொண்ட இத்தொடரின் உரிமையை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ் 22 எபிசோடுகளாக பிரித்து உலகமெங்கும் வெளியிட்டது. வெளியான 2017ஆம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டுள்ளது மனி ஹெய்ஸ்ட்.

அதுமட்டுமின்றி மனி ஹெய்ஸ்ட்டில் இடம்பெற்ற ப்ரொஃபஸர் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் எட்டு கொள்ளையர்களையும், அவர்களை வழிநடத்தும் ப்ரொஃபஸர் என்ற ஒருவரையும் சுற்றி நடக்கும் கதைதான் மணி ஹெய்ஸ்ட்.

இந்தக் கதை டோக்யோ என்ற பெண்ணின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. இத்தொடரின் ஐந்து சீசன் வெளியாகியுள்ளது. காதல், கொள்ளையில் மாட்டிக் கொள்ளும் சக கொள்ளையர்களை காப்பாற்றுதல் என விறுவிறுப்பான களத்துடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரின் ஐந்தாவது சீசனின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி வெளியானது. இதன் இரண்டாவது பாகம் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது. இதன் டீசர் இன்று (அக்.13) வெளியானது. இந்த பாகத்துடன் மணி ஹெஸ்ட் தொடர் முடிவுக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மணி ஹீஸ்ட் வெப் சீரிஸ் பார்க்க ஊழியர்களுக்கு லீவு கொடுத்த 'படா' கம்பெனி

ABOUT THE AUTHOR

...view details