மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் நேற்று (மே 21) தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு திரையுலகினர், பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அதன்படி, நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், "அன்புள்ள மோகன்லால், உங்கள் முதல் படத்திலிருந்தே உங்களை நேசிக்கிறேன். உங்கள் பணியின் தரத்தைக் கண்டு பொறாமை கொண்டேன்.
நான் உங்களோடு சேர்ந்து பணிபுரிகையில் இன்னும் அதிகமாக உங்களை நேசித்தேன். நீடுழி வாழ்க என் இளைய சகோதரா" எனக் குறிப்பிட்டிருந்தார்.