மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்' படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
மோகன்லால் - இயக்குநர் பிரியதர்ஷன் கூட்டணியில் பிரமாண்ட பொருள்செலவில் உருவாகிவரும் திரைப்படம் 'மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்'.
பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்து வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஜாமோரின் கடற்படைத் தலைவரான குஞ்ஞாலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படம், 100 கோடி ரூபாய் பொருள்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுப் படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், மலையாள நடிகர்கள் நெடுமுடி வேணு, முகேஷ், சித்திக், இயக்குநர் ஃபாசில், ரெஞ்சி பணிக்கர், ஹரீஷ் பெராடி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.