தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் வரும் ஜார்ஜ் குட்டி: 'த்ரிஷ்யம் 2' அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ராம் பட அப்டேட்

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் 'த்ரிஷ்யம் 2' படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

mohanlal
mohanlal

By

Published : May 21, 2020, 4:24 PM IST

மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் 2013ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் 'த்ரிஷ்யம்'. திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்தப்படம் மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் மோகன்லாலின் திரையுலக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாது இந்தத் திரைப்படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லாலை வைத்து 'ராம்' என்னும் புதிய படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார். இதில் மோகன்லாலுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இப்படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. கேரளாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை ஏறக்குறைய படக்குழு முடித்துவிட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வெளிநாடுகளில் எடுப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது கரோனா தொற்று காரணமாகப் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த சூழல் சரியான பிறகே 'ராம்' படத்தின் மீதி படப்பிடிப்பு தொடங்கப்படும் என்பதால் அதற்குள் 'த்ரிஷ்யம் 2' படத்தை இயக்கும் முயற்சியில் ஜீத்து ஜோசப் இறங்கியுள்ளார்.

இன்று (மே 21) தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் மோகன்லால் ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்தாக 'த்ரிஷயம் 2' படத்தின் டைட்டில் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தப்படம், 'த்ரிஷ்யம்' படத்தின் தொடர்ச்சியாகவும் முதல் பாகத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் இதிலும் நடிப்பார்கள் எனவும் இவர்களுடன் வேறு சிலரும் நடிப்பார்கள் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. படத்தில் பணிபுரியும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் படக்குழு விரைவில் அறிவக்கவுள்ளது.

இப்படம் முழுவதும் கேரளாவிலேயே எடுக்கப்பட உள்ளதால் கேரள அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளித்தவுடன் இதன் படப்பிடிப்பு தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சீனியர் நடிகைகளை போனில் நலம் விசாரித்த மோகன்லால்!

ABOUT THE AUTHOR

...view details