நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிச.12) தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மோடி! - rajinikanth birthday
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு வழக்கமான பிறந்தநாள் மட்டுமின்றி, ரஜினி அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளானர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அன்பான ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ரஜினிகாந்த் எனும் காந்தசக்திக்கு பிறந்தநாள்!