தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் மாநாடுக்கு சிக்கல் - சிம்புவைப் பழிவாங்கும் உதயநிதி? - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நடிகர் சிம்புவிடம் நிலவும் தனிப்பட்ட விரோதம் காரணமாக அவர் நடித்துள்ள மாநாடு (maanaadu release) படத்திற்கு உதயநிதி இடையூறுகள் ஏற்படுத்திவருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சிம்பு
சிம்பு

By

Published : Nov 22, 2021, 9:55 AM IST

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு (maanaadu). சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வருகின்ற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஏற்கனவே தீபாவளிக்கு மாநாடு திரைப்படம் ரிலீசாவதாக இருந்தது. ஆனால் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் (Annaatthe) வெளியாகவிருந்த காரணமாக மாநாடு ரிலீஸ் (maanaadu release) ஒத்திவைக்கப்பட்டது. அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் இப்படத்தை வெளியிட்டார்.

அண்ணாத்த படத்திற்கு நிறைய திரையரங்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக 'மாநாடு' படத்தை வெளியிட விடாமல் உதயநிதி செய்துவிட்டார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களான பூங்காக்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மாநாடு படம் வெளியாகவுள்ள இந்த நேரத்தில் இப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது படத்தின் வெற்றியைத் தடுப்பதற்காகவே என்றும், சிம்புவை பழிவாங்கவே இந்த அறிவிப்பு எனவும் கூறப்படுகிறது.

ஏனென்றால் முன்னதாக அண்ணாத்த படம் வெளியானபோது இது போன்று, 'தடுப்பூசி கட்டாயம் போட்டால்தான் திரையரங்குகளில் அனுமதி' என்ற அறிவிப்பு வெளியாகவில்லை என்பது கவனிக்கப்படத்தக்கது.

இதில் கூடுதல் அம்சமாக தீபாவளியன்று அண்ணாத்த தவிர வேறு எந்தப் படத்தையும் ஆளுங்கட்சியினர் வெளியிட விடாமல் தடுத்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டையும் புறந்தள்ள முடியாது. மேலும் 'மாநாடு' படத்திற்கு முழு பார்வையாளர்கள் வரக்கூடாது என்பதற்காகவே உதயநிதி தரப்பு அறிவித்தலின் பேரிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது எனவும் பேசப்படுகிறது.

இதையும் படிங்க:ஒரேநாளில் ஒரு கோடி: ஹிட் அடித்த சிம்புவின் மாநாடு

ABOUT THE AUTHOR

...view details