தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 17, 2019, 8:53 AM IST

ETV Bharat / sitara

'அசுரன்' சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் - ஸ்டாலின்!

பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன் என திமுக தலைவர் ஸ்டாலின் அசுரன் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

asuran

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ''வெக்கை'' நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
மேலும், படத்தில் சர்ச்சையான காட்சிகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் இப்படத்தை பார்த்துள்ளார். பின் இப்படம் குறித்த தனது கருத்தை சமூகவலைதளப்பக்கமான ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், 'அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து, சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதைகளம் வசனம் என வென்று காட்டியிருக்கும் இயக்குநர் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் நடிகர் தனுஷுக்கும் பாராட்டுகள்' என்று கூறியுள்ளார்.

ஸ்டாலினின் இந்த ட்வீட்டால் ரசிகர்கள் பலரும் சமூகவலைதளத்தில் கொண்டாடியும் பகிர்ந்தும் வருகின்றனர்.

இதையும் வாசிங்க: அசுரனைப் பாராட்டிய உலக நாயகன் கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details