தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தேசிய விருது வென்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து! - MK Stalin tweet news

சென்னை: தேசிய விருது வென்றுள்ள கோலிவுட் திரைப் பிரபலங்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
தேசிய விருது பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

By

Published : Mar 23, 2021, 12:25 PM IST

2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் நேற்று (மார்ச்.22) அறிவிக்கப்பட்டன. அதில், சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது ’அசுரன்’ படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷுக்கும், துணை நடிகருக்கான தேசிய விருது விஜய்சேதுபதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்த்திபன் இயக்கி, நடித்த ’ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தேசிய விருது மற்றும் ஒலிப்பதிவு பிரிவுகளில் ஒத்தசெருப்பு படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த ஒலிப்பதிவு பிரிவில் ரசூல் பூக்குட்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளருக்கான தேசிய விருது இமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய விருது பெறும் திரைப் பிரபலங்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள ஸ்டாலின், “தேசிய விருது பெறும் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், இமான் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

அசுரன் வெற்றிமாறனுக்கு அன்புநிறை வாழ்த்துகள். அர்ப்பணிப்புடன் முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன். மென்மேலும் சிறப்புகளைப் பெறுக” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...’பதவி சுகம் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து சென்றார்’ - ஆ.ராசா தாக்கு

ABOUT THE AUTHOR

...view details