'அமரகாவியம்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மியா ஜார்ஜ். அதனைத்தொடர்ந்து 'இன்று நேற்று நாளை', 'ஒருநாள் கூத்து', என்று ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர், தற்போது விக்ரமுடன் இணைந்து கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.
தொழிலதிபரை கரம்பிடித்த 'ஒரு நாள் கூத்து' பட நடிகை - மியா ஜார்ஜ் திருமணம்
நடிகை மியா ஜார்ஜின் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நேற்று (செப்.12) நடைபெற்றது.

மியா
இதற்கிடையில் கடந்த மாதம் இவருக்கும், கேரளாவைச் சேர்ந்த அஷ்வின் பிலிப் என்கிற தொழில் அதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று (செப்.12) மியா - அஷ்வினின் திருமணம் எர்ணாகுளத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் நடைபெற்றது. அதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.