தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓடிடியில் வெளியாகும் மிர்ச்சி சிவாவின் இடியட்! - Mirchi Siva's Idiot to be released on ott

மிர்ச்சி சிவா நடித்துள்ள இடியட் படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

 ஓடிடியில் வெளியாகும் இடியட்
ஓடிடியில் வெளியாகும் இடியட்

By

Published : Jun 29, 2021, 3:03 PM IST

சந்தானம் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு', 'தில்லுக்கு துட்டு 2' ஆகிய ஹாரர் காமெடி படங்களை இயக்கியவர் ராம்பாலா. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனையடுத்து ராம்பாலா தற்போது மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில் 'இடியட்' என்னும் ஹாரர் காமெடி படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது. விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார்.

ஓடிடியில் வெளியாகும் இடியட்
Mirchi Siva's Idiot
காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details