தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நயன்தாரா படத்தை தடை செய்க - டிஜிபியிடம் புகார்

நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக அப்படத்தைத் தடைசெய்ய வேண்டும் எனச் சிறுபான்மை மக்கள் நல கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

மூக்குத்தி அம்மன் திரைப்படம்
மூக்குத்தி அம்மன் திரைப்படம்

By

Published : Nov 5, 2020, 8:33 PM IST

நடிகை நயன்தாரா-நடிகர் ஆர்.ஜே. பாலாஜி இணைந்து நடித்துள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன். சரவணன்-ஆர்.ஜே. பாலாஜி இணைந்து இயக்கியுள்ள இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 14ஆம் தேதி ஹாட்ஸ்டார்-டிஸ்னி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ட்ரெய்லரில் வரும் சில வசனங்கள் கிறிஸ்துவ, இஸ்லாமிய மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக, சிறுபான்மை மக்கள் நல கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்துள்ள அவர்கள், இப்படத்தில் அமைந்துள்ள சில காட்சிகளால் மதக் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மறு தணிக்கை செய்து மத உணர்வுகளை புண்படுத்தும்படி அமைந்துள்ள காட்சிகளை நீக்கிவிட்டுப் படத்தினை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இல்லையெனில், நடிகை நயன்தாரா, இயக்குநர்கள் ஆர்.ஜே. பாலாஜி - சரவணன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து படத்தைத் தடைசெய்ய வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் மீண்டும் திறக்கப்பட்ட திரையரங்குகள்

ABOUT THE AUTHOR

...view details