மலையாள திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் டொவினோ தாமஸ் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்துவருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'ஃபாரன்சிக்' (forensic) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதனையடுத்து டொவினோ தாமஸ், இயக்குநர் பேஸில் ஜோசப் இயக்கும் 'மின்னல் முரளி' படத்தில் நடித்துவருகிறார். வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் இப்படத்தை தயாரித்துவருகிறது.
இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் உரிமையை அதிக விலை கொடுத்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.