தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இசைஞானியை சந்தித்த மத்திய அமைச்சர் - இசை அமைப்பாளர் இளையராஜா ஸ்டூடியோ

சென்னையில் இளையராஜாவை சந்தித்த மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி அதன் புகைப்படங்களைத் தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

minister of state kishan reddy meets musician ilaiyaraja
minister of state kishan reddy meets musician ilaiyaraja

By

Published : Mar 30, 2021, 3:50 PM IST

இசை அமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவுடன் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து கோடம்பாக்கத்தில் புதிதாக ஸ்டுடியோ ஒன்றைத் தொடங்கி தனது இசைப் பணிகளை மேற்கொண்டுவருகிறார்.

இசைஞானியை சந்தித்த இணை அமைச்சர் கிஷன் ரெட்டி

இதனையடுத்து இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு அவ்வப்போது பிரபலங்கள் பலர் வருகைதருகின்றனர். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டுடியோவிற்கு வந்து இளையராஜாவைச் சந்தித்து ஸ்டுடியோவையும் பார்வையிட்டார். மேலும் நடிகர் விவேக்கும் இளையராஜாவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

கிஷன் ரெட்டி ட்வீட்

இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி இளையராஜாவைச் சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை கிஷன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பத்ம விபூஷண் இசைஞானி இளையராஜாவை சந்தித்த மகிழ்வான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details