தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய் தேவரகொண்டாவின் 'லைகர்': அறிமுகமாகும் பாக்சிங் ஜாம்பவான் மைக் டைசன் - லைகர் திரைப்படம்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் 'லைகர்' படத்தில் பாக்சிங் ஜாம்பவான் மைக் டைசன் நடிக்கிறார். இதன் மூலம் அவர் இந்திய சினிமாவில் முதன் முறையாக அறிமுகமாகிறார்.

Vijaya Devarakonda
Vijaya Devarakonda

By

Published : Sep 27, 2021, 5:47 PM IST

கமர்ஷியல் கிங் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் லைகர் (LIGER) திரைப்படத்தில், இளம் நாயகன் விஜய் தேவரகொண்டா நடித்துவருகிறார். இவருடன் அனன்யா பாண்டே, சார்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

லைகர் படத்தை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன் தயாரித்து வருகிறது. இவருடன் பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், அபூர்வா மேத்தா ஆகியோரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

தற்போது லைகர் படத்தில் பிரபல பாக்சிங் வீரரான மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லைகர் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறையை முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் வெளியாகும் தேதி உள்ளிட்ட விவரங்களை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் லைகர் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையில் வெளியாகிறது.

இதையும் படிங்க: லயனும் டைகரும் சேர்ந்ததுதான் ‘லைகர்’ - விஜய் தேவரகொண்டா படத்துக்கு இப்படி ஒரு டைட்டில்!

ABOUT THE AUTHOR

...view details