'மிக மிக அவசரம்' படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ளார். விஜயின் 'புதிய கீதை', 'ராமன் தேடிய சீதை' படங்களை இயக்கிய ஜெகன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.
ஸ்ரீபிரியங்கா, 'வழக்கு எண் 18/9' முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண் காவலர்களுக்கு மேல் அதிகாரிகளால் ஏற்படும் அவஸ்தைகளையும், அவமானங்களையும் அடிப்படையாக வைத்து படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது.