புதுச்சேரி: மிக மிக அவசரம் திரைப்படத்தின் நடிகை பிரியங்கா உள்ளிட்ட படக்குழுவினர் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றனர்.
பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மிக மிக அவசரம். பெண் காவலர்கள் படும் அவஸ்தைகளையும் அவமானங்களையும் விவரிக்கும் இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனிடையே இத்திரைப்படத்தின் படக்குழுவினர் இன்று புதுச்சேரி வந்தனர். அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மிக மிக அவசரம் படக்குழுவினர் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றபோது பின்னர் நமது ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்த நடிகை பிரியங்கா, "மிக மிக அவசரம் படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம். பெண்கள் ஒரு விஷயத்தைச் சொன்னால் அதற்கு தீர்வு கிடைக்கிறதா என்பதுதான் படத்தில் முக்கியமாகச் சொல்லப்படுகிறது. நான் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவள். எனக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" எனத் தெரிவித்தார்
மேலும், சினிமா தொழிலில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்று கூறிய அவர், மிக மிக அவசரம் திரைப்படம் தனக்கு ஒரு சவால் கொடுக்கக்கூடிய திரைப்படமாக இருந்ததாகக் கூறினார். மேலும் இத்திரைப்படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய திரைப்படம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.