தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புதுப்பொலிவுடன் வருகிறது எம்ஜிஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’! - மீண்டும் ரிலீஸாகிறது உலகம் சுற்றும் வாலிபன்

எம்ஜிஆர் நடிப்பில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் படம், டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் தயாராகி மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

எம்ஜிஆர் நடிப்பில் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் படம், டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் தயாராகி மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
எம்ஜிஆர் நடிப்பில் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் படம், டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் தயாராகி மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

By

Published : Mar 9, 2021, 12:47 PM IST

எம்ஜிஆரின் அரசியல் வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்பட்ட போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன். திமுகவில் இருந்து நீக்கப்பட்டு அதிமுக தொடங்கப்பட்ட பின், அக்கட்சி கொடியுடன் படம் வெளியானது. படத்தில் எம்ஜிஆருக்கு முருகன், ராஜூ என இரண்டு கதாபாத்திரங்கள். “மின்னலைப் பிடித்து ஆக்கப்பூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார்” விஞ்ஞானியான முருகன்.

அத்திட்டத்தின், 'பார்முலா'வை அபகரிக்க வில்லன் கூட்டம் முயற்சி செய்யும். எதிரிகளின் சதித்திட்டத்தை விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ எப்படி முறியடிக்கிறார் என்பது தான் கதை. முருகன், ராஜூ என இரண்டு கதாபாத்திரங்களையும் கனக்கச்சிதமாக ஏற்று நடித்திருப்பார் எம்ஜிஆர். லதா, மஞ்சுளா, சந்திரகலா என மூன்று கதாநாயகியர் நடித்திருப்பார்கள்.

கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோரின் பாடல்வரிகள் கேட்பவரின் மனதை கொள்ளை கொண்டது. இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் வெளியான 'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், பச்சைக்கிளி முத்துச்சரம், நிலவு ஒரு பெண்ணாகி, சிரித்து வாழ வேண்டும்' ஆகிய பாடல்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றன.

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் ஒன்றே எம்ஜிஆரின் திறமைக்கு மிகப்பெரிய சான்று. இத்தகைய மிகச்சிறந்த திரைப்படம் தற்போதுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், டால்பி அட்மாஸ் சவுண்டுடன் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜன் வழங்க, 7 ஜி பிலிம்ஸ், சரோஜா பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன.

இதையும் படிங்க :நர்ஸிங் கல்லூரியை திறக்கக் கோரி மாணவிகள் காத்திருப்பு போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details